Pro Volleyball League
Pro Volleyball League

Pro Volleyball League – இந்தியாவை பெருத்த வரை புரோ கைப்பந்து லீக் போட்டி முதல்முறையாக நடைபெறுகின்றன. இந்த போட்டி மக்களை கண்டிப்பாக ஈர்க்கும். இந்த போட்டியின் மூலம் பல இளைஞர்கள் கைப்பந்து ஆட்டத்தில் சேர்வதற்கு முயற்சிப்பார்கள்.

இதுபோன்ற போட்டிகளில் நல்ல அனுபவம் மற்றும் பரிசு தொகை கிடைப்பதால் தங்கள் குழந்தைகளை கைப்பந்து ஆட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவிப்பது அதிகரிக்கும்.

மேலும் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுவதன் மூலம் உள் நாட்டு வீரர்கள் நல்ல ஆட்ட அனுபவத்தை பெற முடியும்.

இதனால் இந்திய கைப்பந்து அணியின் தரம் உயரும். இது இந்திய அணி சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற சிறப்பாக வழிவகுக்கும்.

போட்டி நடப்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதால் வீரர்கள் பிரபலம் அடைவதுடன் அவர்களின் வாழ்க்கை முறையும் மாறும்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 1 முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

மற்றும் எல்லா அணியிலும் 2 வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர் மற்றொரு சிற‌ப்பு.

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது.

இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

போட்டியில் பல விதிமுறை மாற்றம் செய்து இருப்பதால் இந்த லீக் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போல் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளும் சமபலம் வாய்ந்தவை தான்.

எனவே போட்டி தினத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணி வெற்றி பெறும்.

சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் நவின் ராஜா ஜேக்கப், ஒலிம்பிக் போட்டியில் ஆடிய கனடாவை சேர்ந்த ரூடி, லாத்வியாவை சேர்ந்த ருஸ்லான் மற்றும் கபில்தேவ், அக்கின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.

செர்வ், அட்டாக்கிங் உள்பட எல்லா துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

எனவே இந்த போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here