Pro Kabadi Match | kabadi League | mumbai Vs UP | mumbai recorded their 8th consecutive victory over UP. Aslo Tamil Thalavash win
புரோ கபடி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று உள்ளது அதே சமயம் தமிழ் தலைவாஸ் அணி போட்டியை சமன் செய்தது.

Pro Kabadi Match : 7-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது.

இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 95-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி 39-36 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பதிவு செய்தது.

தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 36-36 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

இதில் ஆட்டம் முடியும் தருவாயில் 33-36 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது தமிழ் தலைவாஸ் அணி.

தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் எதிரணியை ஆல்-அவுட் செய்து அதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றதால் தோல்வியில் இருந்து தப்பியது.

தமிழ் தலைவாஸ் வீரர் அஜித் குமார் ரைடு மூலம் 18 புள்ளிகள் சேர்த்து அசத்தினார்.

17-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் 3 வெற்றி, 11 தோல்வி, 3 டை என்று 30 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here