Pro Kabaddi League Tournament | Bengal Warriors against Tamil Thalaivas | Sports News | Tamil Sports News | Tamil News | Latest News
புரோ கபடி லீக் போட்டியில் கிடைக்கும் எல்லா வாய்ப்பிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து வருவது தமிழ் ரசிகர்களை கவலைப்பட செய்துள்ளது .

Pro Kabaddi League Tournament : 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நடந்த 128-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 13-13 என சமனிலை வகித்தன.

இரண்டாவது பாதியில் வழக்கம்போல் தமிழ் தலைவாஸ் அணி சோபிக்க தவறியது.

தென்ஆப்பிரிக்காக்கு அணி எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி .!

இறுதியில், 33 – 29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணி, இந்த சீசனில் 4 வெற்றி, 3 டிரா, 15 தோல்வி என மொத்தம் 37 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 – 36 என்ற புள்ளி கணக்கில் யு.பி யோதா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here