Pro Kabaddi League 2019 Highlights | UP Yoddha vs Jaipur Pink Panthers in Chennai: UP Beat Jaipur | Sports News | Tamil Cinema News
Pro Kabaddi League 2019 Highlights

Pro Kabaddi League 2019 Highlights – 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. முதலில் அரியான ஸ்டீலர்ஸ் மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் அரியான ஸ்டீலர்ஸ் அணி 16-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்த பாதியில் மும்பை அணி அரியானாவை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தின் முடிவில் அரியான ஸ்டீலர்ஸ் 30-27 என்ற புள்ளி கணக்கில் மும்பையை சாய்த்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி!

அந்த அணி 4 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் களம் கண்ட மும்பை அணி சந்தித்த 5-வது தோல்வி இது. 4 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் முதல் பாதியில் உ.பி.யோத்தா அணி 16-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

மும்பையின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் – 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி!

பிற்பாதியில் ஜெய்ப்பூர் அணி நெருக்கடி அளித்தாலும் வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவில் ஜெய்ப்பூர் அணி 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

8-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 3-வது வெற்றி இது. 4 தோல்வி, 2 டையும் கண்டுள்ளது.