PRO Kabaddi – Haryana vs Delhi – புரோ கபடி லீக் நடைபெற்று இருக்கின்ற நிலையில், நேற்றய 2 ஆட்டங்களில் டெல்லி, ஹரியானா அணிகள் வெற்றி பெற்று இருக்கின்றனர். தினம் இரு போட்டிகள் என்று தொடர் நடத்தப்படுகின்றது.
முதலில் ஹரியானா மற்றும் பெங்கால் அணிகள் மோதினர். இந்த போட்டியில் இரு அணிகளுமே சமமான திறமை கொண்டு விளையாடினர்.
ஆட்டத்தின் இறுதி வரை விறுவிறுப்பு குறையவே இல்லை. மேலும் எந்த அணி வெல்லும் என்று சற்றும் கணிக்க முடியவில்லை.
இறுதியில், ஹரியானா அணி 35-33 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது ஹரியானா அணி.
அடுத்து நடந்த, இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதினர். டெல்லி அணி சிறப்பாக விளையாடியது, அதே போல பெங்களூரு அணியும் விட்டு கொடுக்காமல் சரிக்கு சரி விளையாடியது.
ஆட்டதின் முடிவில் டெல்லி அணி 32-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வெற்றி பெற்றது டெல்லி அணி.
இன்றைய போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கின்றது.
தனது 6-வது வெற்றியை பெறுமா தமிழ் தலைவாஸ் அணி? என்று இன்று நடைபெறும் போட்டியில் பார்த்தால் தெரியும்.