
சென்ற மாதம் 7-ம் தேதி முதல் தொடங்கிய புரோ கபடி லீக் போட்டி இரண்டாம் காட்டமாக இன்னும் நடைப்பெற்று வருகின்றது.
இதில் நாள் ஒன்றிற்கு இரு போட்டிகள் நடக்கும். நேற்றைய ஆட்டத்தில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
நேற்று நடந்த இரண்டாம் கட்ட போட்டியில் ஒரு போட்டியில் புனே அணி மற்றும் டெல்லி அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளுமே ஆக்ரோஷம் குறையாமல் விளையாடினர்.
ஆனால் இறுதியில் புனே அணி 31-27 என்ற கணக்கில் டெல்லி அணியை வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் பெங்களூரு அணி மற்றும் பாட்னா அணியுடன் மோதினர்.
ஆட்டத்தின் போக்கு சமன் என்றாகும் என்று நினைத்த போது சற்றே சுதாரித்து கொண்ட பெங்களூரு அணி 43-41 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.