பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இரண்டாவது நாளே பிரியங்கா செய்த வேலை தெரிய வந்துள்ளது.
Priyanka With BB Contestants : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

டைட்டில் வின்னராக ராஜூ வெற்றி பெற்றார். மேலும் பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பாவனி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா நிரூப் இடையே மோதல் வெடித்து வந்தாலும் அவர் நிரூப்பை எந்த இடத்திலும் விட்டு கொடுக்கவில்லை. அதே போல் அபிஷேக் உடனாக பாண்டிங் நன்றாக இருந்தது.

#aishwarya #soundarya #anirudh

இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிரியங்கா அபிஷேக், நிரூப் மற்றும் அபிநய் ஆகியோருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.