
பெத்தவங்க கூட இல்லாமல் திருமணம் செய்தது ஏன் என பிரியங்கா நல்காரி தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் சீதா என்ற போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய காதலர் ராகுல் என்பவரை மலேசியா முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் கூட இல்லாமல் மிகவும் சிம்பிளாக இவர்கள் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பிரியங்கா அளித்து உள்ள பேட்டி ஒன்றில் பெற்றோர்கள் கூட இல்லாமல் திருமணம் செய்து கொண்டது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். விசா பிரச்சனை காரணமாக அவர்களால் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை ஆனால் எங்களது திருமணத்தால் பெற்றோர்கள் சந்தோஷத்தில் தான் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.