நடிகை பிரியங்கா மோகன் அடுத்த படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அப்படத்திற்காக நடைபெற்ற பூஜை புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் பிரியங்கா மோகன். முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கி இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் ஆழமாக பதிந்த இவர் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் போன்ற வெற்றி படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன் - வைரலாகும் படப்பிடிப்பின் பூஜை புகைப்படங்கள்.

இவர் தற்போது நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பிரியங்கா மோகன் அடுத்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அந்த தகவல் உறுதியாகி உள்ளது. அதாவது நடிகர் ஜெயம் ரவி தனது முப்பதாவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன் - வைரலாகும் படப்பிடிப்பின் பூஜை புகைப்படங்கள்.

இந்த “ஜெயம் ரவி 30” என்ற படத்தை எம்.ராஜேஷ் இயக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தில் இயக்குனர் நாட்டி மற்றும் வி டிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன் - வைரலாகும் படப்பிடிப்பின் பூஜை புகைப்படங்கள்.