இயக்குனர் ஒருவர் தமிழில் உள்ளாடையை காட்ட சொன்ன விஷயத்தை ஓப்பனாக பேசியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

இத படத்தை தொடர்ந்து இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி அங்கே பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தன்னைவிட வயதில் சிறியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட் சினிமாவின் முதல் படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வேதனை குறித்து பதிவு செய்துள்ளார். அதாவது ஒரு நடிகரின் படத்தில் நடிக்கும் போது நெருக்கமான காட்சி ஒன்றில் உடையை கழட்டி உள்ளாடையை காட்ட வேண்டும் என இயக்குனர் சொன்னார்.

அது மட்டுமில்லாமல் அப்படி காட்டினால் தான் எல்லோரும் பார்க்க வருவார்கள் எனவும் மோசமாக பேசினார். அவர் அப்படி சொன்னது எனக்கு பிடிக்கவில்லை ஆகையால் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.