கணவருடன் பிரச்சனையா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பிரியங்கா பதிலளித்துள்ளார்.

Priyanka About Her Husband : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றனர் தொகுப்பாளினி பிரியங்கா.

ராஜூ டைட்டில் வெல்ல பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் லைவ் வீடியோவில் வந்த அவர் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரசிகர்கள் உங்கள் கணவரின் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என கேள்வி எழுப்பினர்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை அவருக்கு கேமரா முன்னாடி வருவது பிடிக்காது. அவர் அதிகமாக கேமரா முன்பு வரமாட்டார் என கூறியுள்ளார். என்னுடைய கணவர் பற்றி இன்னொரு பதிவில் கூறுகிறேன் எனவும் கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த கையோடு தன்னுடைய கணவருடன் கூட அவர் எந்தவித போட்டோவையும் வெளியிடவில்லை. இதனால் பிரியங்கா சொல்வது நம்பும்படியாக இல்லை என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.