Priya Prakash Varrior joins with Rakul Preeth Singh : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Priya Prakash Varrior joins with Rakul Preeth Singh :

ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது.

இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில் இவர் கண்ணடிக்கும் வீடியோ பெரும் புகழை பெற்றது. ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் போன வேகத்திலேயே கீழே சரிந்தார்.

அவருடைய கேரியரே இனி அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில் தற்போது அவர் அதிரடியாக புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இரட்டை வேடத்தில் தளபதி, பட்டய கிளப்பும் தளபதி 63 பர்ஸ்ட் லுக் – ரிலீஸ் தேதியும் வெளியானது.!

பாலிவுட்டில் லவ் ஹேக்கர்ஸ் எனும் காதல் படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்கிறாராம். இது இவருக்கு கண்டிப்பாக ஒரு கம்பேக் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கமிருக்க தற்போது தெலுங்கிலும் நிதின் நடிக்கும் ஒரு படத்தில் இவர் ஒப்பந்தமாகி உள்ளாராம். இப்படத்தில் முதல் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.