Priya Prakash Varrier
Priya Prakash Varrier

Priya Prakash Varrier : ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது.

இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?

இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில் இவர் கண்ணடிக்கும் வீடியோ பெரும் புகழை பெற்றது. ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் போன வேகத்திலேயே கீழே சரிந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு தவறுக்காக மீண்டும் வைரலாகி வருகிறார் பிரியா.

மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபிக்கு தற்போது இருக்கும் இமேஜே வேறு. அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது.

இந்நிலையில் தேர்தலில் நிற்கும் சுரேஷ் கோபிக்கு ஆதரவாக அண்மையில் பிரியா பிரகாஷ் வாரியர் பேசியிருப்பதால் தற்போது அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதே வேகத்தில் சென்றால் பிரியா ட்ரோல் குயின் ஆகிவிடுவார் என்றே சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.