Priya Prakash Varrier
Priya Prakash Varrier

Priya Prakash Varrier : ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது.

இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில் இவர் கண்ணடிக்கும் வீடியோ பெரும் புகழை பெற்றது. ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் போன வேகத்திலேயே கீழே சரிந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு தவறுக்காக மீண்டும் வைரலாகி வருகிறார் பிரியா.

இவர் வாசனை திரவியம் ஒன்றின் விளம்பரத்திற்காக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அட.. ஜோதிகாவா இது? இதுவரை வெளிவராத பழைய புகைப்படத்தை நீங்களே பாருங்க!

அதை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் அங்குதான் இவர் ஒரு தவறு செய்துள்ளார்.

விளம்பரம் குறித்த வாசகத்தை அந்நிறுவனம் ப்ரியாவுக்கு அனுப்பி வைக்க, அவர் அதை அப்படியே காப்பி செய்து இன்ஸ்டாகிராமில் பேஸ்ட் செய்துவிட்டார்.

Priya Prakash Varrier

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் போடுவதற்கான வாசகம் என்று அந்நிறுவனம் அனுப்பியிருந்ததை அப்படியே பிரியா காப்பி, பேஸ்ட் செய்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை விடுவனா என கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

அதைதொடர்ந்து அந்த புகைப்படத்தையே அவர் தன்னுடைய பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

இருந்தும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டு தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.