Priya Mani Answer to Fan

என்ன கட்டிக்கிறியா என ரசிகர் கேட்டதற்கு கூலாக பதிலளித்துள்ளார் நடிகை ப்ரியா மணி.

Priya Mani Answer to Fan : தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்தவர் பிரியாமணி. அறிமுகப் படமான இந்தப் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார்.

இதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ப்ரியாமணி.

சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அதில் ரசிகர் ஒருவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என கேட்டுள்ளார்.

இதற்கு பிரியாமணி எனக்கு ஆட்சேபனை இல்லை என் கணவரிடம் அனுமதி கேளுங்கள் என கூலாக பதிலளித்துள்ளார்.