தளபதி விஜய் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைய இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் சமீபத்தில் வெளியான ருத்ரன், பத்து தல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமலின் இந்தியன் 2, அருள் நிதியின் டிமான்டி காலனி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் அடுத்தபடியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து இப்படத்தில் இணைய இருக்கும் கதாநாயகி குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் கீர்த்தி ஷெட்டியை தொடர்ந்து தற்போது பிரியா பவானி ஷங்கரின் பெயர் அடிபட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.