Priya Bhavani Shankar Sharing About Acting in Indian 2 | Kamal Haasan | Kajal Aggarwal | Sidharth | Shankar | Tamil Cinema News
இந்தியன் 2 படத்தில் நடிப்பது குறித்து ப்ரியா பவானி ஷங்கர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Priya Bhavani Shankar Sharing : சின்னத்திரையின் மூலமாக பிரபலமாகி இன்று வெள்ளித்திரையில் நாயகியாக ஜொலித்து வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதையெல்லாம் தாண்டி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இந்த பிரபஞ்சத்தை நான் நம்புகிறேன். கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆனால் சற்றும் எதிர்பாராமல் உலக நாயகன் கமல்ஹாசன் சாருடன் நடிக்கும் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது.

தல 60 படத்தில் கமிட்டான முதல் நடிகை – சூப்பர் அப்டேட் இதோ.!

அவருடன் மட்டுமில்லாமல் எனக்கு பிடித்த நடிகரான சித்தார்த்துடனும் பிடித்த நடிகையான காஜல் அகர்வாலுடனும் சேர்ந்து நடிப்பு இன்னும் உற்சாகத்தை கூட்டுகிறது.

அனைத்து ஆசிர்வாதங்களும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சார் மூலமாக கிடைத்திருப்பது என்னுடைய அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கரின் இந்த பதிவிற்கு லைக்ஸ்களும் பாராட்டுகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன. அவர்களுடன் இணைந்து கலக்கல் சினிமாவும் உங்களை வாழ்த்துகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.