கொளுத்தும் வெயிலில் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ள ப்ரியா பவானி சங்கர்.
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.
இந்த சீரியலை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியாக நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.