நடிகை பிரியா பவானி சங்கர் சொந்தமாக உணவகம் ஒன்றை திறக்க இருப்பதால் வேலைக்கு ஆட்கள் வேண்டி பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் தான் ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும், அதற்கு LIAM’s Diner என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்து இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்ததை தொடர்ந்து தற்போது அந்த ஹோட்டலில் பணிபுரிய சமையல்காரர் மற்றும் ஊழியர்கள் வேண்டும்” என்று அவர் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.