Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar : ப்ரியா பவானி ஷங்கர் கிளாமருக்கு தாவிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்கியில் உறைய வைத்துள்ளது.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.

வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது வரை அடக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமருக்கு தாவிய புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுவரை குடும்ப குத்து விளக்காகவே பார்த்து ரசித்த அவரது ரசிகர்கள் திடீரென கிளாமருக்கு மாறியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.