பிரபல நடிகருடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Entry in BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று முதல்வார எலிமினேஷன் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து அடுத்ததாக இன்று இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் நடைபெற உள்ளது.

இன்றைய ஆடுகளம் : வழிகாட்டியாய் டோனி

பிரபல நடிகருடன் பிக்பாஸ் வீட்டில் நுழைய போகும் பிரியா பவானி சங்கர் - ஆனால் போட்டியாளராக இல்லை.!!

18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் நேற்று ஒருவர் எலிமினேட் ஆகிவிட்டார். மேலும் திருநங்கையான நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில் தற்போது 16 பேர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.

நீங்களே பேசிட்டு இருந்தா நான் எப்படி பேசுறது? – கடுப்பான Andrea Jeremiah | HD

இந்த நிலையில் வெகுவிரைவில் பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் சேர்ந்து பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவர் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போவது இல்லை. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள ஓமன பெண்ணே திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் விஐபியில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக தான் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.