கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar About Vishal Movie : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர்.

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா பிரியா பவானி சங்கர்? ரசிகரின் கேள்விக்கு அவர் அளித்த பதில்.!!

மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்களுடன் பிரியா பவானி சங்கர் உரையாடிய போது ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஷால் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. நான் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர் அடுத்ததாக பொம்மை, குருதி ஆட்டம், ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.