திருமணம் குறித்து பேசியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
தமிழ் சினிமாவில் சீரியல் மூலம் அறிமுகமாகி ஹீரோயினாக வளர்ந்தவர் பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து யானை குருதியாட்டம் கடைக்குட்டி சிங்கம் ரத்தினம் பொம்மை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தனது திருமணம் குறித்து பேசி உள்ளார்.
ராஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், சினிமாவிற்கு வர காரணமே அவர்தான் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய போவதாகவும் ப்ரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.
இவரின் இந்த தகவலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.