Priya Atlee Photos
இதுக்கு கூடவா கேக் வெட்டி கொண்டாடுங்க என அட்லீயையும் அட்லீயின் மனைவியையும் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Priya Atlee Photos : தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக பிகில் படத்தின் மூலமாக விஜயை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அட்லீயும் அட்லீயின் மனைவி ப்ரியாவும் சேர்ந்து வீட்டு நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை ப்ரியா அட்லீ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பணம் இருக்கு என்பதற்காக இப்படியெல்லாம் பண்ணாதீங்க, எவ்வளவோ ஏழ்மையான குடும்பங்கள் உள்ளன, அவர்களுக்கு உதவி செய்திருக்கலாம் என கூறுகின்றனர்.

மேலும் சிலர் அட்லீயிடம் அப்டேட் கேட்டுள்ளனர், இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் அப்டேட் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.