Priya Atlee Grandpa Passes Away
Priya Atlee Grandpa Passes Away

தன்னுடைய மனைவியின் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம் பற்றி பதிவிட்டுள்ளார் அட்லி.

Priya Atlee Grandpa Passes Away : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனரானார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அட்லி, பிரியா என்ற சின்னத்திரை நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஷாருக்கானுடன் அட்லியின் அடுத்த படம்.. இணையத்தில் லீக்கான செம மாஸ் சீக்ரெட்.!!

தற்போது பிரியாவின் தாத்தா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது அவருக்கு 82 வயது. அவருடைய மறைவு தங்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக அட்லி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் பலரும் ப்ரியாவின் தாத்தா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.