
தான் அப்பாவான விஷயத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் இயக்குனர் அட்லி.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தளபதி விஜயை வைத்து தெறி மெர்சல் பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் பெற தொடங்கினார். மேலும் தற்போது இவர் ஷாருக்கானை வைத்து தவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ சமூக வலைதளத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்திருப்பதாக இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அட்லி மற்றும் பிரியாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.