Priya Atlee About Quarantine Time
Priya Atlee About Quarantine Time

ஊரடங்கால் இதெல்லாம் போச்சு என புகைப்படத்தை வெளியிட்டு புலம்பியுள்ளார் அட்லியின் மனைவி பிரியா.

Priya Atlee About Quarantine Time : தமிழ் சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தவர் பிரியா. இவர் இயக்குனர் அக்னியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக ஊர் சுற்றி வருகின்றனர். மேலும் அந்தகாரம் என்ற படத்தின் மூலமாக பிரியா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்.

இதுவரைக்கும் இவரை இப்படி பார்த்திருக்கவே மாட்டீங்க – அப்படி ஒரு உடையில் முதல் முறையாக புகைப்படம் வெளியிட்ட ஜூலி!

அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இப்படமும் வெகு விரைவில் ரிலீசாக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழு இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள பிரியா அட்லியுடன் ஊர் சுற்றிய புகைப்படத்தை வெளியிட்டு இதையெல்லாம் மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு பிரியா எனக்கு இது போதும் என தன்னுடைய நாயை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.