Priya Anad
கோடி கோடியா கொடுத்தாலும் இதுல மட்டும் நடிக்கவே மாட்டேன் என ப்ரியா ஆனந்த் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா படத்தில் கூட நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருடைய பேட்டி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் தொகுப்பாளர் எந்த மாதிரியான விளம்பரங்களில் நடிக்கவே மாட்டீர்கள் என கேட்க முகத்தை வெள்ளையாக்கும் க்ரீம்களின் விளம்பரங்களில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.

வெள்ளை தான் அழகு என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது தவறு. தெந்திந்திய பெண்களின் அழகும் ஒளியும் வேறு யாருக்கும் வரவே வராது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.