Priya Anand Pair With RJ Balaji

அவருடன் என்றால் டபுள் ஓகே என பிரபல நடிகருடன் ஜோடி போட உள்ளார் ப்ரியா ஆனந்த்.

Priya Anand Pair With RJ Balaji : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து எல்.கே.ஜி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அவருடன்னா டபுள் ஓகே.. மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி போடும் ப்ரியா ஆனந்த்.!!

இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து பாலாஜி அடுத்ததாக ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த பதாய் ஹோ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்.

இந்த படத்தினை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்க அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.