Priya Anand in Andhagun Movie

பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து வரும் அந்தாதூண் படத்தின் ரிமேக்கான அந்தகன் படத்தில் பிரபல தமிழ் நடிகை இணைந்துள்ளார்.

Priya Anand in Andhagun Movie : தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரஷாந்த். அஜித், விஜய், ரஜினி என பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகராக வலம்வந்தார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனமுடைந்து போன அவர் திரையுலகை விட்டு விலகினார். இந்த கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

பிரசாந்த், சிம்ரன் இணைந்து நடிக்கும் அந்தாதூன் ரிமேக்கில் இணைந்த தமிழ் நடிகை - வைரலாகும் புகைப்படம்.!!

பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். பிரஷாந்த்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் பிரியா ஆனந்தும் இணைந்துள்ளார்.

பிரசாந்த் மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இதனை உறுதி செய்துள்ளது.
Attachments area

பிரசாந்த், சிம்ரன் இணைந்து நடிக்கும் அந்தாதூன் ரிமேக்கில் இணைந்த தமிழ் நடிகை - வைரலாகும் புகைப்படம்.!!