Prithvi Shaw
Prithvi Shaw

Prithvi Shaw – இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி நடந்துக் கொண்டு இருக்கின்றது.

அதில் இந்தியா 250/9 என்ற ஸ்கோர் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா இப்பொழுது களத்தில் உள்ளது. இந்திய அணியில் பூஜாரா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

இதற்கு முன்னதாக விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது பிரித்வி ஷா-க்கு இடது கணுக்காலில் காயம் ஏற்ப்பட்டது.

இதன் காரணமாக இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரிதிவி ஷா இந்தியா – ஆஸ்திரேலியாவிற்க்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை.

இந்திய அணியின் மிடில் ஆர்டில் இன்னும் யாரும் சரியாக இடம் பெறாத நிலையில் கே.எல்.ராகுல் மற்றும் ராயுடு போன்றவர்களும் தற்போது சரியாக விளையாட நிலையில் 4 மற்றும் 5-வதாக போட்டியில் இறங்க வீர்ரகள் இன்னும் பயிற்சி எடுத்து தங்களில் திறமையை வெளிக்காட்ட வேண்டும்.

இந்த டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக விளையாடத நிலையில் மிடில் ஆர்டில் வெறுமையே தொடர்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியது

இளம் வீரர் பிரித்வி ஷா தற்போது குணமடைந்து வருகிறார். இந்த வார இறுதிக்குள் அவர் நடக்க தொடங்கிவிட்டால் போட்டியில் கலந்துக்கொள்வார்.

மேலும், 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவரின் காயத்தின் நிலையை பார்த்தே அவரை போட்டியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இதனால், 3-வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கே வாய்ப்பு உள்ளது என்று தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here