Prithvi Shaw Ruled Out
Prithvi Shaw Ruled Out

Prithvi Shaw Ruled Out – இந்திய அணியில் இருந்து இளம் நட்சத்திர துவக்க வீரர் பிரித்வி ஷா காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஆஸ்., சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதனால், 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் இடம் பிடித்துள்ள இளம் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா, காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ராகுல் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில்,

பிரித்வி ஷா விலகல் இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்து இருக்கிறது.

ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற போது, இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இரு வாரங்களில் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இன்னும் முழுமையாக சரியாகாத நிலையில் அவருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here