தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் பிரின்ஸ், சர்தார் ஆகிய படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரின் படங்களும் முதல்முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் ஒன்றாக வெளியானது.

இந்நிலையில் SKவின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.7.03 கோடியும், கார்த்தியின் சர்தார் ரூ.6.91 கோடியையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் வசூலில் பின்தங்கி இருக்கும் சர்தார் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் இதுவரை நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் விரைவில் பிரின்ஸ் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.