பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகப் போவதாக தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர். மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாளை வெளியாகும் பிரின்ஸ் டிரைலர்…!!! உற்சாகத்தில் ரசிகர்கள்!.

சமீபத்தில் தமன் இசையில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 9ஆம் தேதியான நாளை வெளியாக போவதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.