சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் பீஸ்ட் திரைப்படத்தை போல் PLF ஃபார்மேட்டில் திரையரங்கில் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

தளபதியை ஃபாலோ பண்ணும் சிவகார்த்திகேயன்!!… புது ஃபார்மேட் குறித்த தகவல் வைரல்!.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் தமன் இசையில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

தளபதியை ஃபாலோ பண்ணும் சிவகார்த்திகேயன்!!… புது ஃபார்மேட் குறித்த தகவல் வைரல்!.

இந்நிலையில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கும் பிரின்ஸ் திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பிரின்ஸ் திரைப்படம் சென்னையில் சில திரையரங்குகளில் PLF எனும் 1:1.8 ரேஷியோ பார்மட்டில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக பீஸ்ட் திரைப்படமும் PLF பார்மட்டில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.