பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிரின்ஸ். அனுதீப் அவர்களின் இயக்கத்தில் எஸ் எஸ் தமன் அவர்களின் இசையில் உருவாகி உள்ளது இந்த திரைப்படம். ‌

வெளியானது பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி.. ரசிகர்களை கொண்டாட வைத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை நடித்துள்ளார். சுரேஷ் ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெளியானது பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி.. ரசிகர்களை கொண்டாட வைத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

ஆயுத பூஜை தின ஸ்பெஷலாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.