நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “பிரின்ஸ்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ் மற்றும் வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

SKவின் பிரின்ஸ் திரைப்படம்!!… நியூ ப்ரோமோ வைரல்!.

வரும் அக்டோபர் 21ஆம் தேதி ஆன நாளை இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. முதல்முறையாக சிவகார்த்திகேயனின் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில் இப்படத்தின் புதிய ப்ரோமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.