Price Amount for CWC Title Winner

குக்கு வித் கோமாளி டைட்டில் வின்னர் கனிக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.

Price Amount for CWC Title Winner : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதழ் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பானது. அந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல் கோலாகலமாக நடைபெற்றது.

போட்டியின் இறுதியில் கனி டைட்டிலை வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். கனியின் சமையலும் பிரசெண்டேஷன் முதல் சீசனில் வனிதா செய்திருந்தது விட ஒருபடி மேலாக இருந்ததாக நடுவர்கள் பாராட்டினர்.

மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும் 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிச்சன் பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனி கண்டிப்பாக பைனலில் தென்னிந்திய உணவைத் தான் சமைக்க வேண்டும் என உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் ரன்னராக ஷகிலாவும் இரண்டாவது ரன்னராக அஸ்வினும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‌