
மீ டூ விவகாரத்தில் பெண் போட்டோகிராபர் ப்ரீத்திகா மேனன் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன்-க்கு எதிராக பதிவு செய்திருந்த டீவீட்டை நீக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மீ டூ பிரச்சனை தலை தூக்கியுள்ளது. நடிகைகள் இந்த இயக்கத்தின் மூலம் ட்விட்டரில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி கூறி பலரின் முகத் திரையை கிழித்து வருகின்றனர்.
போட்டோகிராபர் பிரித்திகா மேனனும் தியாகராஜனுக்கு எதிராக ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து நேற்று பத்திரிகையாளரை சந்தித்த தியாகராஜ் அந்த பெண் மீது வழக்கு தொடர் போவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரித்திகா ட்விட்டரில் தான் பதிவு செய்திருந்த டீவீட்டை நீக்கியுள்ளார்.
இதனால் தியாகராஜன் அவர்களின் தரப்பில் இருந்து இதில் இருந்தே அந்த பெண் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிந்திருக்கும் என கூறுகின்றனர்.
