Premji Tweet About Master
Premji Tweet About Master

ஒரே வார்த்தையில் ட்வீட் போட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

Premji Tweet About Master : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் மவுனம் காத்து ரசிகர்களை கடுப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெறும் மாஸ்டர் என்ற வார்த்தை மட்டுமே பதிவிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

இவரின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் மாஸ்டர் அப்டேட் வெளியாகப் போகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் விஜய் பிடிக்காத சில நெட்டிசன்கள் டீ மாஸ்டர், போண்டா மாஸ்டர் என நக்கலாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

சிலர் இந்த பதிவு குறித்து விமர்சனம் செய்ய அதனை தற்போது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.