சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல நடிகர் ஒருவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

Premji As Villian to Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அனுதீப் இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் இவர் தான் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.