Premier Badminton League Chennai
Premier Badminton League Chennai

Premier Badminton League Chennai – ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியின் ஒரு பகுதியாக நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

பிபிஎல் மும்பை பிரிவு ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

முன்னதாகவே பி.வி. சிந்து, புனே அணியின் கேப்டனும், உலக சாம்பியனுமான கரோலினா மரினை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னை அணியின் சுங் ஜி ஹியுன் 15-13, 14-15 மற்றும் 15-7 என்ற செட் கணக்கில் சிந்துவை வெற்றி பெற்றார்.

சிந்திவின் இந்த தோல்வி ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. போட்டியின் ஒரு செட்டில் மட்டுமே சிந்து அதிக புள்ளி எடுத்து இருந்தது குறிப்பிட தக்கது.

மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத் அணியின் லீ ஹியுன் வென்றார்.

இதனை தொடர்ந்து இரட்டையர் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியின் போடின் இஸாரா-கிம் சே ரங் ஜோடி சென்னை அணியின் வீரர்களை வீழ்த்தினர்.