Premgi Amaren Decision on Marriage
Premgi Amaren Decision on Marriage

திருமணம் குறித்து நடிகர் பிரேம்ஜியின் எடுத்துள்ள முடிவால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Premgi Amaren Decision on Marriage : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரேம்ஜி. கிடுகிடுவென வயது ஏறிக்கொண்டே சென்றாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிள் ஆகவே இருந்து வருகிறார்.

என் இளவரசருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால்?? – திருமணம் குறித்து மனம்திறந்த ஷெரின்!

ரசிகர்களும் அடிக்கடி பிறகு எப்போது திருமணம் என கேள்வி கேட்டு வருவது வழக்கம். ஆனாலும் பிரேம் ஜி தான் முரட்டு சிங்கள் தான் என கூறி வருகின்றார்.

இப்படியான நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் என்னுடைய வீட்டில் எனக்கு திருமணம் வேண்டாம் என கூறி விட்டேன்.

கல்யாணம் குழந்தை குட்டி எல்லாம் நமக்கு எதற்கு?? நான் எனக்காக வாழ ஆசைப்படுகிறேன் மற்றவர்களுக்காக வாழ விருப்பமில்லை.

மூக்குத்தி அம்மன் OTT வழியில் ரிலீஸா?? – ஆர் ஜே பாலாஜி வெளியிட்ட தகவல்

திருமணம் செய்து கொள்ளுமாறு என்னுடைய குடும்பத்தில் எவ்வளவோ வற்புறுத்தினார்கள் ஆனால் நான் முடியவே முடியாது என கறாராக கூறி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரேம்ஜியின் இந்த முடிவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.