பிரேம்ஜி வீட்டில் நடந்த விசேஷம் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்குபவர் பிரேம்ஜி. இவருக்கு சமீபத்தில் இந்து என்பவருடன் திருமணம் ஆனது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பிறகு பிரேம்ஜி சமூக வலைத்தளங்களின் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மனைவியுடன் ரொமான்ஸ் மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இப்படியான நிலையில் அவருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் அவரது மனைவிக்கு தாலி பெருக்கு விசேஷம் அவர்களது வீட்டில் நடந்துள்ளது.
பிரேம்ஜியின் மனைவி அந்த வீடியோவை வெளியிட்டு அதில் “முருகப்பெருமானால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடங்குகிறோம். அன்பு விசுவாசம் மற்றும் அவருடைய இறைவனின் பாதுகாப்போடு ஒவ்வொரு அடியிலும் நாம் தயாராக இருக்கிறோம்”என்று பதிவிட்டு உள்ளார்.
பிரேம்ஜி மனைவியின் இந்த வீடியோ மற்றும் பதிவு இணையத்தில் வைரலாகி தீயாகப் பரவி வருகிறது.