Premam Tamil Remake
Premam Tamil Remake

பிரேமம் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆனால் யார் நடிக்கலாம் என்பது குறித்து அப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பேசியுள்ளார்.

Premam Tamil Remake : மலையாள சினிமாவில் நிவின் பாலி சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார்.

மலையாளத்தைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானது.

விட்ட இடத்தை பிடிக்கும் நடிகை… சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு இவரா?

இந்த நிலையில் பிரேமம் திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அதில் ஒரு பேட்டியில் ஒருவேளை பிரேமம் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆனால் அப்படத்தில் நடிப்பதற்கு ஏற்ற நடிகர் யாராக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனுஷ் ஒருவரே இதற்கு ஏற்ற நடிகர். அவரால் மட்டுமே மூன்று வேடங்களை ஏற்று சிறப்பாக நடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு கூறிய பிறகு தனுஷ் ரசிகர்கள் தனுஷின் நடிப்பில் பிரேமம் திரைப்படம் ரீமேக் ஆக வேண்டும் என தங்களது ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழுக்கு வரும் பிரேமம் பட இயக்குனர் – இந்த படத்தோட ஹீரோ யார் தெரியுமா?

ரசிகர்களின் ஆசையை தனுஷ் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அப்படியே பிரேம் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆனாலும் மலையாளத்தை போல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.