
சென்னையில் தேமுதிக செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவர் மற்றும் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அவைத்தலைவராக இளங்கோவன் மற்றும் கொள்கைபரப்பு செயலாளராக மோகன்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.
தேமுதிகவில் இதுவரை எந்தவொரு பதவியிலும் பிரேமலதா விஜயகாந்த் இருந்ததில்லை. தற்போது, எந்த பதவியிலும் இல்லாமல் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.