Premalatha vijayakanth

Premalatha vijayakanth : விருதுநகர்: கடவுளை நம்புகிறவர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் நபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் திருமங்கலத்தில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.

அப்போது பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், தேமுதிக இணைந்துள்ள கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி. மேலும் இது ராசியான கூட்டணியாகும் என கூறினார்.

மேலும் அழகர்சாமி குறித்து பேசுகையில், இவர் கேப்டன் விஜயகாந்த் மனதில் இடம்பிடித்த வேட்பாளர் ஆவார்.

எனவே இவரை வெற்றி பெற வைத்தால் விருதுநகர் தொகுதியில் அனைத்து திட்டங்களையும் செய்து முடிப்பார்.

குறிப்பாக திருமங்கலத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே பாலத்தை உடனடியாக முடித்து வைப்பார் என தெரிவித்தார்.

முன்னதாக, இங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக்தாகூர் 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்து எதையும் செய்யவில்லை,.

மேலும் விஜயகாந்தையும் தேமுதிகவையும் அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று அசிங்கப்பட்டுள்ளார்கள்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர்கள் வீட்டிலும் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்கிறது. எனவே அலிபாபாவும் 40 திருடர்களும் காணாமல் போய்விடுவார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா அவர்கள், ‘எங்களுடைய கூட்டணி கடவுளை நம்பும் கூட்டணி.

ஆனால் கடவுளே இல்லை என்று சொல்லும் திமுக கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு நாளை யாரும் வேதனைப்படக் கூடாது.

கடவுளை நம்புவோர் எங்களுக்கு வாக்களியுங்கள் ‘ இவ்வாறு பிரச்சாரத்தில் பிரேமலதா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here