premalatha
சுபஸ்ரீயின் மரணம் பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேசியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Premalatha talk about Subashree death controversy – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல கட்சிகள் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என கூறி விட்டனர்.

சர்கார் படமே வெளியே வந்திருக்காது – விஜயை மிரட்டும் அதிமுக அமைச்சர்

இந்நிலையில், நேற்று சென்னை ஆவடியில் நடைபெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரமேலதா ‘ ஜெயஸ்ரீயின் மரணம் யதார்த்தமாக நடந்த விஷயம்.

பேனர் வைக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த நேரத்தில் அங்கு செல்ல வேண்டும். பேனர் கீழே விழ வேண்டும்.

பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி அவர் இறக்க வேண்டும் என்பது விதி. இதை எதிர்கட்சிகள் பெரிதுபடுத்தி வருகின்றன’ என அவர் பேசினார்.

அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர்.