Premalatha and Jayalalitha
Premalatha and Jayalalitha

Premalatha and Jayalalitha – திருச்சி: முடிவுகளை அறிவிப்பதில் மறைந்த ஜெயலலிதா அவர்கள் போலவே பிரேமலதா விஜயகாந்த் செயல்படுவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசியிருJப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை மற்றும் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரமேலதாவை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டதோடு மட்டுமல்லாமல் அவரை புகழ்ந்து தள்ளினார்.

மேலும் “அறிவிக்க வேண்டிய நிகழ்ச்சியை, அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்ற புரட்சி தலைவி ஜெயலலிதாவை போலவே பிரேமலதா செயல்படுவதாக கூறினார்.

ஜெயலலிதாவிற்கு பிறகு எங்களுக்குக் கிடைத்திருக்கும் நம்பிக்கை அண்ணியார் தான்” என்று புகழ்ந்து பேசினார்.

மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை துவங்கியதிலிருந்து தேமுதிக வேறு கூட்டணிக்குப் போகாது என நம்பிக்கையோடு இருந்தோம்.

அதன்படியே கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றதைப் போன்று தற்போது எங்களுடன் இக்கட்சி இணைந்துள்ளது என கூறினார்.

பிறகு பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘விஜயகாந்த் நலம் பெற்று வருகிறார் என கூறிய பிரேமலதா அவர்கள், அடிக்கடி ஒளிமயமான எதிர்காலம் என்று துவங்கும் சிவாஜி பாடலையே அவர் முனுமுனுப்பதாக குறிப்பிட்டார்.

இதில் சிவாஜி என்பதற்கு பதிலாக எம்ஜிஆர் என அவர் குறிப்பிட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது’ .

மேலும் பேசிய அவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்திருப்பார் என கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.