Pregnant women eat Eggplant? : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Daily Health Tips

 Pregnant women eat Eggplant? :

* கர்ப்பகாலத்தில் அதிக சூடான, குளிச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் பப்பாளி, அன்னாசி பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

* இவை மட்டுமின்றி சில காய்கறிகளும் கெடுதலை விளைவிக்கும். அதிலொன்று தான் கத்திரிக்காய். கத்தரிக்காயில் வைட்டமின் ஏ, நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்களும் உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் ஏன் கத்தரிக்காய் அதிகமாக சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

* கத்தரிக்காய் செரிமானம், வாயுக்கோளாறு, மலேரியா போன்ற பல பிரச்சினைகளை இது குணப்படுத்தக்கூடும். ஆனால் ஆயுர்வேதத்தின் படி கர்ப்பகாலத்தில் பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை பார்க்கலாம்.

* கருச்சிதைவு மாதவிடாயை தூண்டும் பொருட்கள் கத்தரிக்காயில் உள்ளதனால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.

* கத்திரிக்காயில் இருக்கும் பைட்டோஹார்மோன்கள் மாதவிலக்கு தொடர்பான நோய்க்கு சிகிச்சையளிக்கிறது. ஆகவே கத்திரிக்காய் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவ்வளவாக நல்லது கிடையாது.

* கத்தரிக்காய் நமது உடலில் உள்ள அமிலத்தை அதிகப்படுத்துவதால் பல உடல்நல குறைபாடுகள் ஏற்படக்கூடும்.
ஆகவே கத்தரிக்காய் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் அளவோடு எடுத்துக் கொண்டால் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here